போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் தலைமை தாங்கினார். விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு காவல்துறை சார்பில் சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது. அதனைப் பெருமையுடன் சல்யூட் அடித்து முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ‘போதை மற்றும் புகையிலை இல்லா வளாகம்’ விழிப்புணர்வு பிரசாரத்தைத் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கையை அவர் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
காவலரின் மகனை தூக்கி கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜயின் கியூட் ரியாக் ஷன்..! சிறுவனை பார்த்து முதல்வர் சல்யூட் அடித்ததும் சட்டென சிறுவன் செய்த செயல்.. போதை பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிக்கு பதக்கம் வழங்கிய விழாவில் ருசீகரம்..#Chennai | #CMVijay |… pic.twitter.com/WdMEzJSpes
— Polimer News (@polimernews) August 11, 2026
இதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து போதைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். விழாவில் கலந்துகொண்ட மாணவர்களும், “நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், போதைப்பொருள் ஒழிப்பிற்கு எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்” என்று உறுதியளித்தனர்.
விழாவின் நிறைவாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். மேலும், போதைப்பொருள் தடுப்பு மன்றங்களில் சிறந்து விளங்கிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், பதக்கங்களை வழங்கும் நிகழ்வின் போது, போலீஸ் உடையில் மேடைக்கு வந்த காவலர் ஒருவரின் குழந்தையைப் பார்த்த முதலமைச்சர் விஜய், சற்றும் யோசிக்காமல் உடனடியாக அக்குழந்தையைத் தூக்கி வைத்து கொஞ்சினார். எளிய மனிதர்களின் மீதான முதல்வரின் இந்த அன்பான மற்றும் பாசமான செய்கை அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்ததுடன், இது தொடர்பான அழகான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது.
