அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் அல்சமாரா, சிறந்த மனிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை தேவைப்பட்டதை அறிந்த டாக்டர் அல்சமாரா சற்றும் யோசிக்காமல் தன்னுடைய எலும்பு மஜ்ஜையை தானம் செய்ய முன் வந்தார். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. மருத்துவர் கடவுளுக்கு நிகரானவர் என்பதை நிரூபித்த அவரின் சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள். .