I.N.D.I.A கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல இது கொள்கை கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்திய ஒன்றியத்தின் ஆட்சி கருத்தியலாக கூட்டாட்சி கருத்தியல் மலர வேண்டும். இந்திய கருத்தியலைக் கொண்டே இந்தியாவை உருவாக்கவே I.N.D.I.A கூட்டணியை அமைத்துள்ளோம். தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு இதை நாங்கள் உருவாக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.