கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ (CTO) ஒருவருக்குக் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், அடுத்த 30 நாட்களுக்குக் கட்டாயம் முழு ஓய்வு (Bed Rest) எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by PETLINC.in (@petlinc.in)

மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொன்னாலும், வேலையை விட மனமில்லாத அந்த இளைஞர், மருத்துவமனை படுக்கையையே தனது அலுவலகமாக மாற்றிக் கொண்டார்.

படுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் மற்றும் செல்போன் மூலம் தனது அலுவலகப் பணிகளை அவர் தொடர்ந்து கவனித்து வருகிறார். அவரது நண்பர் ஒருவர் இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்துப் பகிர்ந்துள்ளார்.

அதில், “இவர் சோம்பேறி கிடையாது, உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனாலும் வேலையை விட மறுக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். “டாக்டர் சொன்னது பெட் ரெஸ்ட், ஆனா இவரு பண்ணுறது பெட் வொர்க்” என்ற வாசகத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.