மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சனாதன் ஹால்டரின் தந்தை ஒரு தினசரி கூலித்தொழிலாளி. வறுமை சூழ்ந்த பின்னணியில் வளர்ந்த சனாதன், தனது தந்தை பார்த்த வேலையையே செய்வார் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அவர் கையில் எடுத்தது புத்தகங்களை.

சமூகம் அவர் மீது வைத்திருந்த வறுமையின் பிம்பத்தை உடைத்து, படிப்பின் மூலம் முன்னேறத் துடித்தார்..இந்தியாவின் கடினமான போட்டித் தேர்வுகளான SSC CGL, CHSL, MTS மற்றும் CASE ஆகியவற்றைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Sanatan Halder (@the_eternal_whispers)

தற்போது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் (Ministry of Science and Technology) உதவிப் பிரிவு அதிகாரியாக (Assistant Section Officer – ASO) பணியாற்றி வருகிறார். மேலும், 2024-ல் ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டராகவும் (GST Inspector) தேர்வாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. அதில் அவர் சிறுவயதில் படித்துக் கொண்டிருந்த காலம் முதல், இன்று விமானப் பயணம் செய்வது, அரசு வாகனத்தில் செல்வது மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது வரையிலான மாற்றங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.