பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள ஜவைனியன் கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திர சிங் என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, அவரது மனைவி பபிதா தேவி தனது இரு மகள்களுடன் கடும் வறுமையில் போராடி வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பபிதா தேவியும் வறுமை மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால், அந்தக் குடும்பம் ஏழை என்பதாலும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருந்ததாலும், இறுதிச் சடங்கு செய்ய ஒரு உறவினரோ அல்லது ஊர் மக்களோ முன்வரவில்லை.
Both girls are GCs. Their mother died in Saran, Bihar, and no one—not even relatives—came for the last rites.
They performed the rites alone.
Their father, Ravindra Singh, died last year.
In extreme poverty, they had to beg villagers and the State for cremation expenses.… pic.twitter.com/tVGOmutsCQ
— Treeni (@treeni) January 30, 2026
தந்தையை ஏற்கனவே இழந்த நிலையில், தாயின் உடலையும் அநாதையாக விட மனமில்லாத அந்த இளம் மகள்கள், தாங்களே பாடையைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டிற்குச் சென்றனர். ஆண்களே செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை, கண்ணீருடன் அந்த இரு மகள்களே செய்து முடித்துத் தாயின் உடலுக்குத் தீ மூட்டினர்.
