இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், கொழும்பில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியிடம் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய சித்ரா அமின், 81 ரன் எடுத்துத் தனது அணியின் நம்பிக்கையை ஏற்றினார்.
ஆனால் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியபோது, மைதானத்தில் பேட்டை கோபமாக அடித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில், சித்ரா அமினின் நடத்தை குறித்து போட்டி நடுவர் குழு விசாரணை நடத்தி, அவர் வீராங்கனைகளுக்கான நடத்தை விதிகளை மீறியதாக தீர்மானித்தது.
இதனால், அவருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டது. உலக அளவிலான போட்டிகளில் ஒழுக்கம் முக்கியம் என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
