சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அனைத்து மகளிருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருந்தது.

ஆனால் தற்போது இந்த விடியோ அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் பெண்கள் வெளியில் சென்று நடமாடவே முடியாத நிலை இருக்கிறது. பெண்களின் உரிமை, சுதந்திரம் என்று பேசும் ஆட்சியாளர்களே அவர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுவது காலக்கொடுமை. மேலும் அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியுள்ளது கண்டனத்திற்குரியது என்று கூறினார். அதிமுக ஆட்சியில் பெண்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடப்பாடி ‌ பழனிச்சாமி விரிவாக கூறினார்.