தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நல சங்க அமைப்பு சார்பாக ஓட்டுநர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது என்ற செய்தி வெகுவாக பரவி வருகிறது. அதில் நிவாரணத் தொகையை வாங்க விரும்புபவர்கள் தங்களது ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்த விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விளம்பரம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.

இதனை அறிந்த மக்கள் பலரும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை குறித்து அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரசு,ஓட்டுனர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது. அரசு தரப்பில் இருந்து இது போன்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே இதை நம்பி யாரும் இடைத்தலைவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது.