குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வாயிலாகவே பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் GPay மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மோசடி நபர் உங்கள் GPay-க்கு தெரிந்தே பணத்தை அனுப்பிவிட்டு, தவறுதலாக பணம் அனுப்பியதாக அதனை திரும்ப கேட்பார். அதன்படி பணத்தை திருப்பியனுப்பினால் உங்களது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படும். இதுபோல் தவறாக யாராவது பணம் அனுப்பினால் காவல் நிலையத்தில் பணத்தை பெற்றுக்கொள்ள சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.