சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் அதிகமாக காகிதமும் செலவாகிறது. எனவே குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிநீர் கட்டணம் செலுத்த நுகர்வோர் அட்டை இனி வழங்கப்படாது என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நுகர்வோர் அட்டை மூலமாக எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இணைய வழியில் செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய வழியில் தங்களின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமும் செலுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் யுபிஐ மற்றும் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட கட்டண முறைகளை பயன்படுத்தியும் நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் வரி மற்றும் கழிவு நீரகற்று வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.