அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம், பியூனா விஸ்டா டவுன்ஷிப்பில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் நவம்பர் 4ஆம் தேதி காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆன்லைன் ஆர்டருக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததால் ஆத்திரமடைந்த 48 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வாடிக்கையாளர், சூடான காபியை நேரடியாக மேலாளர் மீது வீசித் தாக்கியுள்ளார். நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற மேலாளர், வாடிக்கையாளரின் உணவுக்கான பணத்தைத் திரும்ப அளித்துவிட்டு, அவரிடம் ஒரு காபியைக் குடிக்கச் சொல்லிக் கொடுத்துள்ளார்.
BREAKING – Buena Vista police are seeking the public’s help in locating a black woman who threw boiling hot coffee on a McDonald’s worker while shouting, “Catch that hot ass coffee,” before fleeing the restaurant. pic.twitter.com/JNtIMqYwp0
— Right Angle News Network (@Rightanglenews) November 5, 2025
ஆனால், “அந்தச் சூடான காபியைப் பிடி” என்று ஆக்ரோஷமாகச் சத்தமிட்ட அந்தப் பெண், காபியை மேலாளர் மீது வீசிவிட்டுச் சென்றார். இதனால், மேலாளருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி வைரலான நிலையில், பியூனா விஸ்டா காவல்துறை அந்த வீடியோவை வெளியிட்டு, பொதுமக்கள் உதவியை நாடியது. இதனையடுத்து, வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் சுமார் 100-க்கும் மேற்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்று, தாக்குதலில் ஈடுபட்ட பெண் அடையாளம் காணப்பட்டார். அவர் மீது ‘குற்றவியல் தாக்குதல்’ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
