லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா பல வருடங்களுக்குப் பிறகு நடிக்கின்றார். தற்போது லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகின்றது.

இதற்காக படக்குழு தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றார்கள். ஆனால் சில நாட்களிலேயே த்ரிஷா அங்கிருந்து சென்னை திரும்பி விட்டார். இதனால் லியோ திரைப்படத்திலிருந்து திரிஷா விலகியதாக பல வதந்திகள் கிளம்பியது. இத்திரைப்படம் திரிஷாவுக்கு சிறப்புவாய்ந்ததாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் படத்திலிருந்து எப்படி விலகுவார்?

திரிஷா மீண்டும் சென்னையில் இருந்து நேற்று காஷ்மீருக்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் சாப்பிட்ட உணவு, அறையில் இருந்து எடுத்த பணிபடர்ந்த மழை உள்ளிட்ட புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.