தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக வேஸ்டட் பாடல் மிகவும் ஹிட்டானது. இந்த நிலையில் பாடலின் வீடியோவை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் லிரிக்கல் வீடியோ மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு தற்போது வீடியோ வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றார்கள்.