ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இரவு நேரம் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் கொம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டி யானை கடம்பூர் சாலையை கடந்து விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது.

மேலும் ஒற்றை காட்டு யானை விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து யானை அட்டகாசம் செய்வதால் ஆழமான அகழி வெட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.