
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஈழப் பிரச்சனைக்கு என்றைக்கும் நேர்மையோடு போராடிக் கொண்டிருக்கின்ற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. அந்த இயக்கம் எப்படி காங்கிரஸ்ஸை ஆதரிக்கிறது ? என்று கேள்வி கேட்கிறார்கள். இந்திய அரசியல் சூழலில் காங்கிரஸ் மதசார்பின்மைக்காக நிற்கின்ற கட்சி. இந்திய அரசியலில் மதச்சார்பின்மை என்பது மிகப்பெரிய ஒரு அரசியல். அதை காப்பாற்றியாக வேண்டும்.
அது விடுதலைச் சிறுத்தைகளால் மட்டும் காப்பாற்ற முடியாது. திமுகவால் மட்டும் காப்பாற்றி விட முடியாது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்பும் தேவை. பலவீனமடைந்த கட்சியாக காங்கிரஸ் இருக்கலாம். ஆட்சிக்கு வர முடியாத கட்சியாக காங்கிரஸ் இருக்கலாம். ஆனாலும் அது ஒரு தேசிய கட்சி. பிஜேபிக்கு மாற்று கட்சி காங்கிரஸ் தான்.
அந்த காங்கிரஸ் கட்சியின் நேரு அன்றைக்கு ஒத்துழைத்ததால் தான் அரசியலமைப்புச் சட்டத்தில் சமயசார்பற்ற அரசு (secularism) வந்தது. அந்த காங்கிரஸ் கட்சியின் ஆசானாக…. கொள்கை ஆசனாக இருந்த காந்தியடிகள் ஒத்துழைத்ததால் தான் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தில் ”செக்யூலரிசம்” உயிரோடு இருந்தது.
காந்தி இல்ல வேண்டாம்… நான் ஒரு ராம பக்தர். இந்த நாடு இந்து நாடாக இருக்கணும் அப்படின்னு காந்தி சொல்லி இருந்தால் ? நேருவால் மீறி இருக்க முடியாது. நேரு அதற்கு உடன்பட்டு இருந்தால் ? அம்பேத்கர் இதை அரங்கேற்றம் செய்திருக்க முடியாது. பெரிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கும். காந்தியும் செக்யூலரிசம் (secularism)த்தை ஏற்றுக் கொண்டார். காந்தி தீவிரமான ஒரு சனாதன சக்தி தான். அவருக்கு சனாதாரத்தின் மீது ஒரு நம்பிக்கை இருந்தது உண்மை. ஆனால் தீண்டாமை ஒழிய வேண்டும் என்றார், அதை கூட நாம் ஏற்கவில்லை.
ஆனால் மதச்சார்பின்மைக்காக உயிரை கொடுத்தவர் காந்தி. அவர் கொல்லப்பட்டதே இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருங்கள் என்று சொன்னதற்காக தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். நீ முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவாய் என்று பார்த்தால் நீ முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுறியா ? அதனால்தான் சுட்டுக் கொன்றார்கள். மதசார்பின்மைக்கு ஒத்துழைப்பாக இருந்தவர் காந்தி.
மதசார்பின்மைக்கு உடன்பாடாக இருந்தவர் நேரு அதைவிட முக்கியமாக… அந்த மத சார்பின்மையை அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையிலே திருத்தம் கொண்டு வந்து இணைத்தவர். 1976லே மிசா வந்த போது, ஒரு மசோதா கொண்டு வந்து, We, the people of India,having solemnly resolved to constitute India into a sovereig, democratic, republic இது தான் அம்பேத்கார் அரங்கேற்றம் செய்த போது முதல் முதலில் இருந்தது.
sovereig, democratic, republic இறையாண்மையுள்ள ஜனநாயக குடியரசு. இந்திரா காந்தி அம்மையார் அதுல ரெண்டு வார்த்தையை கொண்டு வந்து சொருகுனாங்க. நேருவின் பிள்ளை என்பதால் மதசார்பின்மையில் அவருக்கு உடன்பாடு இருந்தது. அவர் இந்து மதம் சார்ந்த அரசு இங்கே உருவாவதை விரும்பவில்லை. socialist, secular என்ற இரண்டு சொற்களை இணைத்தார்.
socialist = secular. இப்போ கான்ஸ்டிடியூஷன்ல என்ன இருக்குன்னா ? சாவரின் சோசியலிஸ்ட் செக்யூலர் டெமாக்ரடிக் ரிபப்ளிக் ( sovereig, socialist, secular, democratic, republic ) இந்திராகாந்தி அம்மையாரை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் ? சோசியலிஸ்ட் + செக்யூலர் என்ற இரண்டு சொற்களை அரசியலமைப்பு சட்டத்திலே இணைத்தற்காக தான் காங்கிரசை நாம் ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அது இருப்பதால் தான் இன்றைக்கு ஹிந்துராஷ்டிரா அறிவிக்க முடியவில்லை.
இந்திரா காந்தியின் பிள்ளை என்பதால், ராஜீவ் காந்தி அவர்கள் அதிலே உறுதியாக இருந்தார். ராஜீவ் காந்தியின் பிள்ளை என்பதால், இன்றைக்கு ராகுல் காந்தியும் அதிலே உறுதியாக இருக்கிறார். இப்போது சொல்லுங்கள்… நமக்கு அகில இந்திய பார்வை இருக்கிறது. நமக்கு அகில இந்திய பார்வை என்பது வெறும் தேசிய உணர்வு என்ற அடிப்படையில் இல்லை. அகில இந்திய பார்வை என்பது அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்காக…. ஒரு நேஷனல் விவ்யூ என பேசினார்.