ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் இன்று நேருக்கு நேர் மோதி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் அல்காரஸ் வென்றால், மிக இளம் வயதில் ‘கரியர் ஸ்லாம்’ (Career Slam) சாதனை படைத்த வீரர் என்ற வரலாற்றைப் படைப்பார். இதற்கு முன் 24 வயதில் ரஃபேல் நடால் படைத்த சாதனையை அவர் தகர்க்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை ஜோகோவிச் வென்றால், இது அவரது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதன் மூலம் உலகில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஒரே வீரர் என்ற அசைக்க முடியாத சாதனையை அவர் நிலைநாட்டுவார்.