தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்கு நடிகர் அஜித் தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தை பற்றிய ஒரு விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் அமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் கதையை முதலில் அஜித்துக்காக தயார் செய்திருந்தனர். விக்ரம் அந்த காலத்தில் ஒரு நாள் பற்றி படத்தை கொடுக்க வேண்டும் என போராடிக் கொண்டிருந்தார். இதை தெரிந்து கொண்ட நடிகர் அஜித் உல்லாசம் திரைப்படத்தில் தனக்கு நிகரான ரோலை‌ விக்ரமிற்கும் கொடுக்குமாறும் இயக்குனரிடம் அஜித் கூறியுள்ளார். மேலும் நடிகர்கள் அஜித் மறைமுகமாக பலருக்கும் பல உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது விக்ரமுக்காக அஜித் செய்த காரியம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.