செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஸ்டாலினும், உதயநிதியும் என்ன சொன்னார் ? நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து போட்டு நீட் ஒழிப்போம் என்று சொன்னாரா ? இல்லையா ? அது செய்யுங்க என தான் சொல்லுறோம்... ஏன் பொய் சொல்லி ஓட்டு வாங்கினீர்கள் ? உலகத்திற்கு தெரியும் நீட்டை  கொண்டு வந்தது யார் என்று ?  திமுக ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காந்திசெல்வன் மத்திய அமைச்சராக இருந்தது நீட் மசோதாவை பாஸ் செய்தார்.

பார்லிமெண்டில் நீட் மசோதாவை அறிமுகம் செய்தது யார் ? நாங்களா அறிமுகம் செஞ்சோம்… திமுக தான அறிமுகம் செஞ்சது… அன்றைக்கு விதையை போட்டு…  ஒரு செடியாகியது யார் ?  மரமாக்கியது யார் ? அது முக்கியம். நாங்கள் தெளிவுப்படுத்திட்டோம்… நீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை…  இன்றைக்கும் எங்கள் கொள்கை அதுதான்.

ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தில்…. எங்களால் அனைத்து அழுத்தங்களும், அனைத்து முயற்சிகளும் எல்லா வகையிலும் கொடுத்தோம்.. அதனால் எங்களுடைய நிலைப்பாத்தில் இருந்து மாறவில்லை.  அதே நேரத்தில் படியுங்கள் என் சொல்லி நாங்கள் கோச்சிங் சென்டர் அதிகப்படுத்தி…  ஒரு பக்கம் கோச்சிங் சென்டர் அதிக படுத்தினாலும் கூட…..  ஒரு பக்கம் நீட்  தேவை இல்லை என்ற அடிப்படையில் போனோம் என தெரிவித்தார்.