இந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ரூ.5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், எத்தனை சொத்துக்கள் நீதிமன்றத்தின்  உத்தரவு இல்லாமல் மீட்டுள்ளனர். கட்டாயம் நிலத்தை மீட்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு வந்த பிறகுதான் நிலத்தை மீட்டனர். மேலும், அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்பதுதான் பாஜகவினுடைய நிலைப்பாடு” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.