உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சந்திர சூட் என்பவர் செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் பெயரில் மோசடி செய்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தலைமை நீதிபதியான சந்திர சூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து கைலாஷ் நிக்வால் என்னும் நபருக்கு ரூ. 500 பணம் கேட்டு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் “நான்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி” என்றும் “நான் மிக அவசரமாக கொலிஜிய ஆலோசனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு செல்வதற்காக டாக்ஸி புக் செய்ய ரூ. 500 பணம் வேண்டும்” என்றும், நீதிமன்றத்தை அடைந்ததும் உங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்றும் இருந்தது.

அத்துடன் அந்த செய்தியை நம்ப வேண்டும் என்பதற்காக நீங்கள் அனுப்பும் பணத்தை எனது ஐபாடில் இருந்து திரும்ப அனுப்புகிறேன் என்றும் இன்னொரு குறுஞ்செய்தியை அவர் அனுப்பி இருக்கிறார். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திர சூட் பெயரில் மோசடி செய்யும் வகையில் அனுப்பி உள்ள இந்த குறுஞ்செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த பதிவு மிகவும் வைரலாகி வருகிறது.