விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் யார் தெரியுமா?  துர்கா ஸ்டாலின்…  அவரை இயக்குவது யார் ? அவருடைய மருமகன் சபரீசன். இவங்கதான் இன்னைக்கு  ஆட்சி.மேல் முதலமைச்சராக இருந்து இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னைக்கு அதிகாரிகள் வேலை செய்ய முடியல.

காலைல இருக்கான்,  சாயங்காலம் பார்த்தா மாத்திட்டேன்னு சொல்றாங்க… காலையில புது ஆள் போட்டு இருக்காங்கன்னு போனால்…  திரும்ப ரெண்டு நாள்ல மாத்துறாங்க…  இரண்டு நாளைக்கு ஒரு தடவை 10 IASயை மாத்துறாங்க….  10 IPSயை மாத்துறாங்க…  நிர்வாகம் முழுக்க முழுக்க ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து போயிருக்கிறது.

எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு. இது இல்லாத நாளே இல்லை.  முன்னெல்லாம் அங்க ஒன்னு, இங்க ஒன்னு நடக்கும். கொலை எல்லா ஆட்சியில் நடக்கும். இல்லை என்று சொல்லவில்லை…  எங்கேயாவது ஒரு இடத்துல கற்பழிப்பு என சொல்லுவோம்.. இப்ப எங்க பார்த்தாலும் கூட்டு பாலில் பலாத்காரம்.  இந்த ஆட்சி வந்த பிறகு அவங்க செய்திருக்கின்ற சாதனை…. காவல்துறையினுடைய மெத்தனப்போக்கு….  கையாலாகாத தனம்….

காவல்துறையை கையில் வைத்துக் கொண்டிருக்கின்ற முதலமைச்சரின் உடைய கையாலாகாத தனம்… நிர்வாகத் திறன் இல்லாத காரணத்தால் இன்றைக்கு எங்கே பார்த்தாலும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம்,   நம்ப விழுப்புரம் மாவட்டத்தில் நடந்திருக்கு. பள்ளிக்கு செல்கின்ற மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை,  கல்லூரிக்கு செல்கின்ற மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை,  சரி மாணவிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லைன்னா…  மாணவர்களுக்கு முற்றிலுமாக பாதுகாப்பு இல்லை. தென் மாவட்டத்தில் ஜாதி கலவரம் தலை விரித்து ஆடுகிறது என விமர்சனம் செய்தார்.