அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும். அண்ணா திமுகவோடு  கூட்டணி அஅமைக்கும் கட்சிகளோடு போட்டியிடும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதோடு தமிழக மக்களின் உரிமையை காக்கவும், தமிழக மக்களுக்கு புதிய திட்டங்களை மத்தியில் பெறுவதற்கும்,  தமிழகத்திற்கு திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்கும், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் உடைமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் முன்னிறுத்தி வருகின்ற தேர்தலில் முழங்குவோம் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

இன்றைய முதலமைச்சரை பார்க்கின்றபோது கோமாளித்தனமாக தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று கவுண்டமணி நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் சரி,  2026 சட்டமன்ற தேர்தலிலும் சரி இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்தார்.