விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு,  மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குத்தி கொலை செய்யப்படுகிறார்கள். இதுவரைக்கும் என்ன ?   எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை சாக்லேட், இப்போ போதை பென்சில், பேனா வேற வந்துருச்சுன்றான்….   பென்சில் சாக்லேட் என  ஒன்னு இருக்கும்.

நாம் பசங்களுக்கு வாங்கி கொடுப்போம்.  இப்போ போதை பேனாவாம். அதை அப்படியே சப்பிட்டே இருந்தா ? போதை ஏறிடுமாம். பத்திரிக்கையில் தான் வருது. எல்லாம் பத்திரிக்கையில் தான் வருது.   தெரியாம ஒரு மூலையில் பத்திரிக்கையில் போட்டுட்டாங்க., பத்திரிக்கை முழுக்க முழுக்க இன்றைக்கு திமுகவின் உடைய செயல்களை எழுத மறுக்கிறது. எழுதினால் மிரட்டப்படுகிறார்கள்.

இன்றைக்கு நீங்கள் என்ன நினைக்கிறீங்க ? நம்ம பையன் ஸ்கூலுக்கு போறான்… காலேஜுக்கு போறான்… நல்ல ஒழுக்கமா இருக்கான்…. படிக்கிறான் என நினைக்கிறீங்க…  அது தான் இல்ல. அனைத்து பள்ளி வாசல்களிலும், அனைத்து கல்லூரி வாசல்களிலும் தாராளமாக கஞ்சா கிடைக்கிறது. போதை மாத்திரை கிடைக்கிறது. போதை சாக்லேட் கிடைக்கிறது.  போதை பேனா கிடைக்கிறது. இதை நான் சொன்னால் ? என் மேல கேஸ் போடுவாங்க. போட்டு கிடட்டும்.

கஞ்சா கிடைக்குது… இது கஞ்சா அரசு என பேசினால் கேஸ். இத நான் தான் சொன்னேன். கேஸ் போடும் காவல்துறை கேட்கின்றேன்…  உங்க முதலமைச்சர் பேசி இருக்காரே… காவல்துறை அதிகாரிகளே…  நான் கேள்விப்படுகிறேன்,  அனைத்து பள்ளி வாசல்களிலும்,  கல்லூரி வாசல்களிலும் போதை மாத்திரைகளும், போதை சாக்லேட்டும் கிடைக்கிறது. அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டார். நான் கேட்கிறேன் இந்த டிஜிபிக்கு மானம், ஈனும், சூடு, சொரணை இருக்கா ?  உங்க முதலமைச்சர் மேல கேஸ் போடுங்க. போட முடியுமா ?

இந்த டிஜிபிக்கு தைரியம் இருக்கிறதா ? வழக்கை போடுங்க  பார்ப்போம்… என் மேல வழக்கு போட்ட இல்ல…  நான் என்ன சொன்னேன் ? தமிழ்நாடு முழுவதும் எங்கும் கல்லூரி வளாகத்திலும், பள்ளி வளாகத்திலும் கஞ்சா விற்கப்படுகிறது. போதை மாத்திரைகள் விற்கப்படுகிறது. போதை சாக்லேட் விற்கப்படுகிறது என பேசியதற்கு என் மேல கேஸ் போட்ட தானே…  இப்போ முதலமைச்சரே சொல்லி இருக்காரு. இப்போ உன் மூஞ்சியை தூக்கி எங்க வச்சுப்ப ?

உன்னுடைய முதலமைச்சர் வண்டலூர் பக்கத்துல கூட்டம் போட்டு பேசுறாரு. வாழ்க்கையில் தெரிஞ்சோ, தெரியாமலோ இப்பதான் ஒரு உண்மையை சொல்லி இருக்காரு. அது கூட எழுத , படிக்க தெரியாமல் படிச்சி இருப்பார் என்று நினைக்கிறேன். எழுதிக் கொடுத்தது ஒன்று,  படித்தது ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எப்படியோ உண்மை வந்துருச்சு. உண்மை வெளியில் வந்துருச்சு. விற்கப்படுகிறது இதுதான் உண்மை.

எல்லா பள்ளி வாசல்களிலும், கல்லூரிகளிலும் இன்றைக்கு போதை பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது. தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. சும்மா கண்துடைப்புக்கு…  கஞ்சா 2.1,  கஞ்சா 2.0 என்ன சினிமா பிலிம்மா எடுக்குறீங்க ? இதுக்கு முன்னாடி ஒரு டிஜிபி இருந்தாரு சைலேந்திரபாபு. கஞ்சாவை ஒழிகின்றேன்  என்றால் ? கஞ்சா ஒழிப்பு 2.1,  கஞ்சா ஒழிப்பு 2.2,  கஞ்சா ஒழிப்பு 2.3 என்ன சினிமாவா எடுக்குறீங்க என கடுமையாக விமர்சித்தார்.