தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பயிற்சி மையம் மாணவர்கள் முன்னதாக பயின்ற பள்ளிகளிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.