நடிகையும் பாஜகம்பியுமான கங்கனா ரணாவத்தை, சிஐஎஸ்எப் பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திரைப்பட இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கின்றேன். அந்த அடி நடிகைக்கானது அல்ல. வாக்களித்த மக்களுக்கானது. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால் மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார், வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
