அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் 35 சீட் கிடைத்திருக்கும் என்றும் திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்றும் கூறினார். அதோடு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலை மட்டும் தான் காரணம் என்று கூறினார். இந்நிலையில் எஸ்.பி வேலுமணியின் கருத்துக்கு தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்திருந்தால் எஸ்.பி வேலுமணி கூறியது போன்று 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்பது உண்மைதான். அதிமுக கட்சியோடு பாஜக கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் திமுக இத்தனை இடங்களை வென்றிருக்காது. கூட்டணி என்பது ஒரு அரசியல் வியூகம். 2026 ஆம் ஆண்டு கூட்டணி பற்றி என்னால் தற்போது கூற முடியாது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என எங்களுடைய கட்சியில் யாருமே சொல்லவில்லை. அதிமுக கட்சி குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறினார்.