அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது ஒடிசா மாநிலத்தில் மாண்புமிகு முதலமைச்சர் நவீன் பட்னாஸ் அவர்கள் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. அதேபோல 2019 நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்  சந்திரசேகர் ராவ் அவர்கள் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை,

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் பிரதமர் முன்னிறுத்தவில்லை, மேற்குவங்க மாநிலத்தில் இருக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர்,  அதேபோல கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி  ஆண்டு கொண்டிருக்கின்து .  அந்தக் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் அவர்களும் 2019ல் நாடாளுமன்றத்தில் பிரதமரை முன்னிறுத்தவில்லை.

ஆக இதையெல்லாம் கடந்த கால வரலாறு. ஆகவே ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்காக…  அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்வை ஏற்படுத்தினார்கள். அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும். அண்ணா திமுகவோடு  கூட்டணி அஅமைக்கும் கட்சிகளோடு போட்டியிடும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதோடு தமிழக மக்களின் உரிமையை காக்கவும், தமிழக மக்களுக்கு புதிய திட்டங்களை மத்தியில் பெறுவதற்கும்,  தமிழகத்திற்கு திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்கும், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் உடைமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் முன்னிறுத்தி வருகின்ற தேர்தலில் முழங்குவோம் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.