தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் புதியதொரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கச்சத்தீவு விவகாரம் குறித்து வைகோ, மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தாலும், விஜய் பேசியவுடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரே அதிருப்தி தெரிவிக்கும் அளவுக்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“என் தலைவன் ஒரு பேச்சு பேசினால் இலங்கையில் கூட பூகம்பம் வருகிறது” என்று வர்ணித்த நாஞ்சில் சம்பத், விஜய்யின் அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
