நடிகர் விஜய்யின் விவாகரத்து சர்ச்சையைத் தொடர்ந்து, அவரது மனைவி சங்கீதா குறித்து விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமான பதிவுகளை வெளியிட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தீவிர டிஜிட்டல் வன்முறை எனக் குறிப்பிட்டுள்ள அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), இத்தகைய அநாகரிகமான செயல்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், தனது ரசிகர்களின் இந்தத் தரம் தாழ்ந்த செயல்களைக் கண்டித்து நடிகர் விஜய் வாய் திறக்காமல் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பிரபல நடிகை ரோஹினி, பெண் உரிமைக்கு எதிரான இந்தச் செயலுக்கு தனது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார்.
