உலகில் வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் வாட்ஸ் அப் நிறுவனம் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் குறித்து ரிப்போர்ட் தெரிவிக்கும் புதிய அப்டேட்டை வாட்ஸப் நிறுவனம் விரைவில் வழங்க உள்ளது.

வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் விதிமுறைகளை மீறி இருந்தால் அல்லது உங்களைப் பற்றி தகவல் உங்களுக்கு தெரிவிக்காமல் பகிரப்பட்டால் புகார் அளிக்கலாம். இதற்காக ஸ்டேட்டஸ் மெனு ஓரத்தில் ரிப்போர்ட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.