வாட்ஸ்அப் தன் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையான ரிப்போர்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. இந்த புது அம்சம் பயனாளர்களுக்கு ஆண்ட்ராய்டு பீட்டாவில் ஸ்டேட்டஸ் அப்டேட் ரிப்போர்ட் செய்யும் வசதியை வழங்கும். Wabetainfo அறிக்கையின் படி பீட்டா சோதனையாளர்கள் ஸ்டேட்டஸ் விருப்பங்களுக்குள் புது “ரிப்போர்ட்” ஆப்ஷனை காண்பார்கள்.

அந்த புது அம்சத்தின் வாயிலாக சேவை விதிமுறைகளை மீறக்கூடிய எந்தவொரு ஸ்டேட்டஸ் அப்டேட்டையும் பயனாளர்கள் ரிப்போர்ட் செய்யலாம். அதன்பின் நிறுவனத்தின் நடுநிலை குழுவிற்கு அனுப்பப்படும். அதோடு செய்திகள், மீடியா, இருப்பிடப் பகிர்வு, அழைப்புகள் மற்றும் நிலை புதுப்பிப்புகள் அனைத்து சாதனங்களிலும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வாயிலாக பாதுகாக்கப்படுவதை இந்த அம்சம் உறுதிசெய்கிறது.