WhatsApp பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது ஏதேனும் ஒரு புது அம்சங்களை அந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் டெவலபர்கள் அச்செயலியில் பல புதிய அம்சங்களை உருவாக்க மற்றும் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் அதன் பயனர்களின் உடனடி செய்தி அனுபவத்தை மேம்படுத்த கேமரா சுவிட்ச், புகைப்படங்களை உயர்ந்த தரத்தில் அனுப்பும் வசதி, வாட்ஸ்அப் குழுவின் நோக்கம் மற்றும் விளக்கங்களுக்கான எழுத்து வரம்பை அதிகரித்து உள்ளது.
WAbetainfo படி, WhatsApp அதன் Android, iOS மற்றும் இணைய பயனாளர்களுக்காக புது அம்சங்கள் இப்போது சோதனை முயற்சியில் இருக்கிறது. அதன்பின் அனைத்து பயனர்களும் இவ்வசதி பெறமுடியும் என தகவல் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் குரூப்பின் சப்ஜெக்டை எழுதுவதற்குரிய வரம்பு 25 ஆக இருந்தது. எனினும் விரைவில் பயனர்கள் 100 வார்த்தைகள் வரை எழுத முடியும். மேலும் விளக்கங்களுக்கான எழுத்துகளின் வரம்பு 512ல் இருந்து 2048 வரை அதிகரிக்கும். இது குழுவின் தலைப்பு மற்றும் சப்ஜெக்டை குழுவிலுள்ள உறுப்பினர்கள் இடையே அட்மின் முறையாகவும், முழுமையாகவும் விளக்கும் அடிப்படையில் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.