உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் நடத்தி வருகின்றது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தார்.

இந்நிலையில் ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பயணங்கள் சந்தா செலுத்தி ப்ளூடூத் பெறும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புளூ டிக் சந்தா மூலம் கடந்த காலாண்டில்ஏழு மில்லியன் டாலர்கள் ட்விட்டர் வருமானம் ஈட்டியதைத் தொடர்ந்து மெட்டாகவும் இந்த நடைமுறையை பின்பற்ற உள்ளது.