உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப்.

ஆண்ட்ராய்டு & ios பயனர்களுக்காக WhatsApp விரைவில் ‘அனிமேஷன் அவதார்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. வளர்ச்சி நிலையில் உள்ள இந்த புதிய அம்சம் நடைமுறைக்கு வந்தால், பயனர்கள் அனிமேஷன் அவதார்களை உருவாக்கி, தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு ஆழமான முறையில் தெரிவிக்க முடியுமென கூறப்படுகிறது. இத்தகைய அம்சத்தை முகநூல் ஏற்கனவே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.