தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் சஞ்சய் தத் தான் மெயின் வில்லன் என்று தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சஞ்சய் தத் படத்தில்  நடிகர் விஜயின் அப்பாவாக நடிக்கிறாராம். இருவரும் மிகப்பெரிய கேங்ஸ்டராக படத்தில் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.