தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் இயக்கம். எல்லா தொண்டர்களும்.. தலைவர்களை விடுங்க…. தொண்டர்கள் நினைப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று சேரனும் என நினைக்கிறார்கள். பொதுமக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடிப்படை தொண்டர்கள், இந்த இயக்கத்தின்பால் பற்றும், பாசமும், பிடிப்பில் இருக்கின்ற தொண்டர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். சில பேரு அதை விரும்பவில்லை. அதனால்வே தொடர்ந்து தோல்வி. 10 தோல்வி. ஈரோடு மாவட்டம் கொங்கு பெல்ட். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. மாண்புமிகு அம்மா அவர்கள் சேவல் சின்னத்தில் தனியா நிற்கும் போதே அஞ்சு தொகுதி ஈரோடு மாவட்டத்தில் ஜெயித்தது.

நடைபெற்று முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணாமலை எங்களை வந்து பார்த்தார்.  கொங்கு பெல்ட்டு. நீங்க வாபஸ் வாங்குனீங்கன்னா… அண்ணா திமுக வெற்றி அடைய வாய்ப்பு இருக்கும்ன்னு சொன்னாரு. நாங்கள் ஏற்றுக் கொண்டோம். டி.டி.வி தினகரனையும் பார்த்தாரு. அவரும் ஏற்றுக்கொண்டார். ஜட்ஜ்மெண்ட் வாங்கி கொடுத்து,  இரட்டை இலையையும் வாங்கி கொடுத்து, கொங்கு பெல்ட்ல்…  ஈரோடு சட்டமன்ற தேர்தலில் 66,000 வாக்கு வித்தியாசத்தில் தோக்குறாங்க என்றால் ? மக்கள் அவர்கள் பக்கம் இல்லை என்பது தான் அதோட அர்த்தம் என தெரிவித்தார்.

உடனே செய்தியாளர்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் தனித்தனத்தில் போட்டியிடுவீர்களா ?  தாமரை சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, சிரித்து கொண்டு இருந்த ஓ பன்னீர்செல்வம் அருகில் இருந்த வைத்தியலிங்கம், இரட்டை இலையில் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.  உடனே பக்கத்தில் இருந்த வைத்தியலிங்கம், உச்சநீதிமன்றம் சென்று இருக்கின்றோம். எங்களுக்கு தான் சட்டவீதி. எங்களுக்கு தான் நியாயம் கிடைக்கும் என கூறினார் வைத்திய லிங்கம். இடையே பேசிய ஓபிஎஸ்,  அண்ணாமலை சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து உரிய பதிலை நான் கொடுத்து விட்டேன் என தெரிவித்தார்.

பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து அண்ணே அண்ணே உங்க பர்மிஷன் ஓட பேசுகின்றேன் என சொல்லிய புகழேந்தி,  ஒரு பத்து வருஷம் மாண்புமிகு அம்மாவுக்காக வாதாடி இருக்கேன்.  அவரோட வழக்குக்காக வாதாடி இருக்கேன். அம்மா இறக்கும் போது குமாரசாமி நீதிபதி கொடுத்த தீர்ப்பின்படி,  நிரபராதி என்ற தீர்ப்போடு தான் இறந்தார். அவர் குற்றவாளி என்று நீங்கள் சொன்னது தப்பு. அவர்கள் குற்றவாளி அல்ல. இறக்கும்போதே நிரபராதி என்ற தீர்ப்பை தான் குமாரசாமி  நீதிபதி வழங்கினார் என்று தெரிவித்தார்.