செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, காவேரி விவகாரத்தில் இங்கயும்  போராட்டம். உண்ணாவிரதம் அங்க பந்த்,  இங்க பத்த்.  இது கிடையாது. இதுக்கு தீர்வு என்ன ? நடிகர் சங்கத்திலேயே கேப்டன் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். முல்லை பெரியாருக்காக தேனியில் உண்ணாவிரதம் இருந்தார். தஞ்சையில் விவசாயிகளுக்காக எத்தனையோ வாட்டி கேப்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிண்டோம். ஏதாவது தீர்வு இருக்கா ?

காவேரி பிரச்சனை இது கலைஞர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.  1968ல் அதுக்காவது காவிரிக்கு ஆணையம் ஒன்று ஆரம்பிச்சு,  அந்த ஆணையம் உருவாக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தை அணுகி 1968 லிருந்து 55 வருஷம் இது நடந்துகிட்டு இருக்கு. என்ன தீர்வு ? தீர்வு தானே முக்கியம். அந்த தீர்வே இங்கே இல்லையே. கட்சிகள் தான் மாறி,  மாறி ஆட்சிக்கு வராங்க.

என்ன காட்சி மாறிச்சு,  இங்க இருக்கக்கூடிய விவசாயிகள் நல்லா இருக்காங்களா ? இங்க இருக்கக்கூடிய மூன்று போகம் பயிர் விளைவிக்க முடிகிறதா ? ஏன் டெல்டா வரைக்கும் இன்னைக்கு பாலைவனமா மாறி இருக்கு.ஏன் மணல் கொள்ளைக்கு அனுமதி தாறாங்க. எதற்காக கனிம வளத்து கொள்ளையை நீங்க ஆதரிக்கிறீங்க ? எதற்கு தண்ணீர் இல்லாமல் தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றிங்க.

அப்போ உங்கள் சுயநலத்துக்கும்,  உங்களை வளர்த்துக் கொள்ளவும்,  உங்கள் கட்சிகளை வளர்த்துக் கொள்ளவும் தான் நீங்க எல்லாம் ஆட்சிக்கு வரீங்களா ? என்ற கேள்வியை மக்கள் கேள்வியாக இந்த நேரத்தில் நான் கேட்கிறேன். ஏனென்றால் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் இங்க  இருக்கக்கூடிய கட்சிகள்  செய்கிறார்களே ஒழிய, அடுத்த தலைமுறைகளுக்கான அரசியலை யாருமே செய்யறது கிடையாது.

இப்பவே பாலைவனம் என்றால் ? அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுட்டு போகிறார்கள். இங்கே  நம்பி வாழுகின்ற மக்கள் எதை நம்பி இருக்காங்க ? விவசாயத்தை தான் நம்பியிருக்கிறார்கள்.  தமிழகத்தில் ஆணிவேர் முதுகெலும்பு. விவசாயம் நல்லா இருந்தால்தான் இந்த நாடு செழிப்பா இருக்கும். எனவே விவசாயத்தை யாரும், என்னைக்கும் கைவிட முடியாது. ஒரு விவசாயி சேற்றில்  இறங்கி வேலை பார்த்தால் தான் நமக்கு சோறு கிடைக்கும். இன்னைக்கு எவ்வளவோ இருக்கலாம். அந்த பசிக்கு உணவு அளிப்பவர் நமது விவசாயிகள். அவங்க நல்லா இருக்கணும் அதுல மாற்று கருத்து இல்லை என தெரிவித்தார்.