
கேரளா மாநிலம் சாருவிளாகம் என்ற பகுதியில் ஜோஸ்(70), சுஷாமா என்ற தம்பதினர் வசித்து வந்தனர். ஜோஸ் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பிரிஜில்(29) என்ற மகன் இருக்கிறார். இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்துள்ளார். அதற்கான தேர்வு எழுதிய போதும் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் இவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவர் தனது பெற்றோர்களுடன் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று சுஷாமா திடீரென அலறினார். இவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டின் சமையலறையில் ஜோஸ் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.
சுஷாமா மயக்கத்தில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மகன் பிரிஜில் தனது தந்தையை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதயடுத்து காவல்துறையினர் அவரை தேடிய நிலையில், அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை சுதந்திரமாக வாழ தனது தந்தை அனுமதிக்கவில்லை என்றும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தந்தையை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.