என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  என்ட்ரன்ஸ் எக்ஸாம் மூலமாக அனைவருக்கும் சமமான ஒரு வாய்ப்பை உருவாக்கி…..  நாம் எல்லா ஏழை குழந்தைகளுக்கும் எட்டா கனியாக இருக்க கூடிய…. டொனேஷன் இல்லாம….. கேப்பிடேஷன் பீஸ் எதுவும் கொடுக்காமல்….. பணத்தை கொடுக்காமல் நேரடியாக மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது,

திமுககாரங்க என்ன பண்றாங்க ? அரசு பள்ளியிலே படிக்கக்கூடிய மாணவச் செல்வங்களை பஸ்ஸில் ஏத்திக்கிட்டு போய்  அங்கே  திமுககாரங்க நிக்கிறான். இந்த கையெழுத்து இயக்கம் என்று நடத்துகின்றார்கள்….  50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து….  குழந்தைகளுக்கு என்ன என்றே தெரியாது ? அந்த குழந்தைகளை கொண்டு போயி ஏதோ ஒரு இடத்துல நிக்க வச்சு…

ஒரு திமுக எம்எல்ஏ கையெழுத்து வாங்குறாங்க. திமுக எம்எல்ஏ கிட்ட குழந்தை திரும்ப கேட்கணும்…  அண்ணே நீ படிச்சிருக்கியானு கேட்கணும்.. பத்தாவதுல எவ்வளவு மார்க் வாங்கணும்னு கேட்கணும்?  அரசியல்வாதிகள் மட்டும் தமிழகத்தில் படித்திருந்தால் எப்பொழுதோ  இந்த மாநிலம் மாறி இருக்கும். கர்மவீரர் காமராஜர் ஐயாவை போல படிக்காத மேதைகள் ஒரு பக்கம். ஆனால் எல்லோரும் படிக்காத மேதைகள் கிடையாது.

அது காமராஜர் ஐயா போல உதாரணம் ஒன்று,  இரண்டு பேர் சொல்லலாம். இன்னைக்கு அதே குழந்தைகள் திரும்ப திமுக எம்எல்ஏ கையெழுத்து போடுன்னு போயி கூட்டத்துல நிப்பாட்டுறாங்களே…  அந்த குழந்தை திமுக எம்எல்ஏவை பார்த்து நீ என்ன அண்ணே  படிச்சிருக்கேன்னு கேட்டா அன்னைக்கே வேலை முடிந்திருக்கும். குழந்தைகளை போய் நிப்பாட்டி,  குழந்தைகள் கிட்ட கையெழுத்து வாங்கி என்னய்யா பண்ண போறீங்கன்னா ? நாங்க நீட் பரீட்சையை ரத்து பண்ண போறோம் என சொல்லுறாங்க என விமர்சனம் செய்தார்.