நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அனல் காற்றிலிருந்து தப்பிக்க மக்கள் விதவிதமான ஐடியாக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இரண்டு இளைஞர்கள் பைக் ஓட்டும்போது வெயிலிலிருந்து தப்பிக்க ‘குழந்தைகளின் டயப்பரை’ வைத்துச் செய்துள்ள ஒரு ‘அக்கப்போரு’ இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் சிரிப்பையும் கிளப்பியுள்ளது.
அவர்கள் செய்த காரியம் கொஞ்சம் வித்தியாசமானது மட்டுமல்ல, யாரும் யோசிக்க முடியாததும் கூட. முதலில் குழந்தைகளின் டயப்பரில் தண்ணீரை ஊற்றி அதை முழுமையாக உறிஞ்ச வைத்துள்ளனர். பின்னர், அந்த ஈரமான டயப்பர்களை பிரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றியுள்ளனர்.
View this post on Instagram
பைக் ஓட்டும்போது கைகளில் க்ளவுஸ் போடுவதற்குப் பதில், அந்த ஐஸ் டயப்பர்களை கைகளில் மாட்டிக்கொண்டும், தலையில் ஹெல்மெட்டுக்கு அடியில் ஒரு டயப்பரை வைத்துக்கொண்டும் கூலாகப் பயணம் செய்கின்றனர். அனல் காற்று வீசினாலும், இந்த ஐஸ் டயப்பர்கள் அவர்களுக்கு ஏசி போன்ற குளிர்ச்சியைத் தருவதாக அந்த வீடியோவில் காட்டியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 3.4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து வியந்துள்ளனர். “இது என்னடா புதுக் கொடுமையா இருக்கு?” என ஒரு தரப்பினர் கிண்டல் செய்தாலும், “வெயிலுக்கு இது நிஜமாகவே நல்ல ஐடியாவாகத் தான் இருக்கிறது” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
‘மேக்சிமம் மந்தன்’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் புதிய டிரெண்டாக மாறியுள்ளது.
