மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக் என்ற பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனுக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுத்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு, நாளும் குறிக்கப்பட்ட திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகன் திருமண கனவுகளில் மூழ்கியுள்ளார். ஆனால் அவரது தந்தையோ மகனின் முதுகில் குத்தியுள்ளார்.

அந்த மாமனார் தனக்கு மருமகளாக வர போகும் பெண்ணின் மீது காதல் கொண்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் குடும்பத்தாருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த மகன் அதிர்ச்சியடைந்தார் தனது துரோகம் செய்த தந்தையையும், வருங்கால மனைவியும் வெறுக்க ஆரம்பித்தார். இனி அவர் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று முடிவும் செய்தார். பலர் ஆறுதல் கூறியும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.