சமூக வலைதளங்களில் ஒரு பாட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில், அவர் பெரும் நாகரிகத்துடன் கத்தி மற்றும் முள்கரண்டி (ஃபோர்க்) பயன்படுத்தி உணவு உண்ணும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்து, பாட்டியின் அசத்தலான பாணியை பாராட்டி வருகின்றனர். இணையத்தில் பலரும் அவரை ‘எட்டிகெட் குயின்’ (நாகரிக ராணி) என்று வேடிக்கையாக அழைத்து, புகழ்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by 𝗧𝗵𝗲 ‘𝗔𝘅𝗲’ 𝗗𝗿𝗼𝗽 (@theaxedrop)

இந்தியாவில் கைகளால் உணவு உண்ணும் பாரம்பரியம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும், உடல் நலத்திற்கு நல்லதாகவும் கருதப்படுகிறது. ஆனால், இந்த வீடியோவில் சேலை அணிந்த அந்த பாட்டி, ஒரு ஆடம்பர உணவகத்தில் அமர்ந்து, வலது கையில் முள்கரண்டியும், இடது கையில் கத்தியும் வைத்து, பன்னீர் துண்டு ஒன்றை மிக நேர்த்தியாக எடுத்து உண்கிறார்.

அவரது இந்த பிரிட்டிஷ் பாணி உணவு உண்ணும் திறமை, பார்ப்பவர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவின் தலைப்பில், “கிளாஸி அண்ட் சாஸி பாட்டி, இணையத்தின் புதிய எட்டிகெட் குயின்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “கிரேட் கோயிங் அஜ்ஜி”, “பாட்டி ராக்ஸ்” என பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.