சூட்கேஸின் சக்கரங்கள் தேய்வதைக் குறைக்கும் ஒரு புதிய ஹேக் தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகியுள்ளது. பயணத்தின்போது பலருக்கும் ஏற்படும் இந்த பொதுவான சிக்கலுக்கான தீர்வாக, @familyusefulhacks என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்த வீடியோ வைரலாகி, இதுவரை 6 கோடியே 86 லட்சம் பார்வைகள் மற்றும் 4 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

இதில், ஒரு கருப்பு PVC டேப்பை எடுத்துச் சூட்கேஸின் நான்கு சக்கரங்களிலும் வட்டமாக சுற்றி ஒட்ட வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது. இதனால் சக்கரங்களில் அழுக்கு ஒட்டுவதை தடுக்கும் என்றும், சக்கரங்கள் நீண்ட நாட்கள் உறுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by FamilyUsefulLifehacks (@familyusefulhacks)

“>

இந்த வீடியோக்கான கமெண்ட் பகுதிகளில் மக்கள் வியப்பும், சந்தேகமும் தெரிவித்துள்ளனர். ஒரு பயனர் “இது அற்புதமான ஐடியா,  மற்றொரு பயனர் “டேப் சிக்கி சக்கர இயக்கத்தில் இடையூறு ஏற்படும்” என எச்சரித்துள்ளார். பயணிகளிடம் இந்த ஹேக் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.