அமேசான் வேலை விட்ட மனோஜ் துமு…
மிகுந்த போட்டி நிறைந்த தொழில்நுட்ப துறையில், ஒரு பெரிய நிறுவனத்தில் கோடிக்கணக்கில் ஊதியம் தரும் வேலையை விட்டு வேறு நிறுவனத்திற்கு செல்வது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், 23 வயதான இந்திய-அமெரிக்கர் மனோஜ் துமு, அமேசானில் பணிபுரிந்தவராக இருந்தார். அவர் பெற்ற ஆண்டு ஊதியம் ரூ.3.36 கோடி ஆகும். ஆனால், அவர் அதை விட்டு, மெட்டா நிறுவனத்தில் புதிய வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த முடிவே தற்போது அவரை நாடு முழுவதும் பேசப்படும் நபராக மாற்றியுள்ளது.
AI, ML வளர்ச்சி காரணமாக புதிய வாய்ப்புகள்
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) துறைகள் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளன. உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த துறைகளில் சிறந்த நிபுணர்களை தேடிக்கொண்டிருக்கின்றன.
இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே மனோஜ் துமுவும் மெட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதுபோல், தொழில்நுட்ப வளர்ச்சியோடு இணைந்தவர்களுக்கு உலகளவில் அதிகமான சம்பள வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
தனிப்பட்ட திட்டங்களை விலக்கி அனுபவத்தை முன்னிலைப்படுத்தல்
மனோஜ் துமு, பிசினஸ் இன்சைடரில் வெளியிட்ட கட்டுரையில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தனிப்பட்ட திட்டங்கள் ஒரு அளவு முக்கியம் உள்ளதாயினும், தொழில்முறை அனுபவம் மிக முக்கியமானது என அவர் கூறுகிறார். மேலும், தனது விண்ணப்பத்தில் (Resume ) தனிப்பட்ட திட்டங்களை நீக்கிவிட்டு, வேலை அனுபவத்தை மட்டுமே குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். எந்த பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக லிங்க்ட்இன் மற்றும் நிறுவன வலைத்தளத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும் கூறியுள்ளார்.
மனோஜ் துமு தனது ரெஸ்யூமில் தனியாக செய்த தனிப்பட்ட திட்டங்களை (personal projects) முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அமேசானில் பெற்ற தொழில்முறை அனுபவத்தை மட்டும் முன்னிறுத்தினார். அதாவது, “நான் mobile app உருவாக்கினேன்”, “AI மாதிரி train செய்தேன்”, “website உருவாக்கினேன் ” போன்ற தனிப்பட்ட முயற்சிகளை பட்டியலிடாமல், தனது industry-level அனுபவத்தை மட்டுமே (யாருடன் பணியாற்றினார், என்ன திட்டங்களை மேம்படுத்தினார், எத்தனை பேர் பயனடைந்தனர் என்பதுபோன்றவை) விவரித்தார். இது தான் மெட்டா நிறுவனத்தில் அவருக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்த முக்கியமான காரணியாக இருந்தது என அவர் பகிர்ந்துள்ளார்.
நடத்தை நேர்காணல்களில் தயாராக இருங்கள்
நிறுவனத்தின் மதிப்புகளுக்கு ஏற்ப பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது மனோஜின் முக்கியக் கூற்று. அமேசான் மற்றும் மெட்டா நிறுவனங்களில் நேர்காணல் ஆட்டங்கள் மிகத் தெளிவான ஒழுங்குடன் நடைபெறுகின்றன. மெட்டாவில், ஒரு திரையிடல் அழைப்பு (screening call) மற்றும் 4 முதல் 6 சுற்றுகளுக்கு இடையில் (Coding tests) குறியீட்டு தேர்வுகள், இயந்திர கற்றல் பரிசோதனைகள் மற்றும் நடத்தை அடிப்படையிலான மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. இவற்றுக்கு தன்னை தயார் செய்ததால்தான், தனது வெற்றிக்கான பாதை சுலபமானதாக அமைந்தது என அவர் கூறுகிறார்.
“வெறும் coding தெரிந்தால் மட்டும் போதாது. உங்களோடு வேலை செய்ய விரும்பும்படி நல்ல நடத்தையும், நிறுவனத்தின் கல்ச்சருக்கு பொருந்தும் நபராக இருக்கணும்!”அதற்கேத்த மாதிரி நேர்காணலில் பதில் சொல்ல தயாராக இருங்கள் என்பதே மனோஜி ன் வழிகாட்டு வார்த்தை…
படிப்பில் இன்டர்ன்ஷிப் இல்லாமல் தொடங்கிய பயணம்
மனோஜ் துமு, கல்லூரி படிப்பின் போது எந்த இன்டர்ன்ஷிப் வாய்ப்பும் கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளார். ஆனால், பட்டப்படிப்பு முடிந்ததும் ஒப்பந்த வேலை வாய்ப்பு கிடைத்தது. இதுதான் அவருக்கு தொழில்முறை அனுபவத்தைத் தந்தது. பின்னர், மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் வாய்ப்பையும், குறைந்த ஊதியத்தில் இயந்திரக் கற்றல் வேலையையும் பெற்றபோது, ML வேலைக்கு தான் அதிக ஆர்வம் என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தார்.
தன்னம்பிக்கையோடு தேர்ந்தெடுத்த வழி வெற்றியைத் தந்தது
மிகுந்த ஆர்வம், நம்பிக்கை மற்றும் முயற்சி இருந்தால் தான் ஒரு பெரிய முடிவை எடுக்க முடியும். மனோஜ் துமு எடுத்த முடிவு பலருக்கும் உந்துதலாக இருக்கிறது. ரூ.3.36 கோடி ஊதிய வேலை வாய்ப்பை விட்டுவிட்டு புதிய துறையை தேடி பயணித்தவர், தற்போது மெட்டாவில் ஒரு முக்கிய பொறுப்பை வகிக்கிறார். தொழில்நுட்பத் துறையில் புதுமையை எதிர்நோக்கிய இளைஞர்களுக்கு, மனோஜின் வாழ்க்கை ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
