சீனாவில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில், பூனை ஒன்று பேட்மிண்டன் விளையாடும் அபூர்வ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அக்டோபர் 2 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு பூனை முதல் மாடியில் உள்ள ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, கீழே உள்ள மனித வீரருடன் பேட்மிண்டன் விளையாடுவதைக் காணலாம்.
பூனை, தனது பாதங்களால் ஷட்டில்காக்கை துல்லியமாக அடித்து, அமைதியாக அமர்ந்தவாறு விளையாட்டில் ஈடுபடுகிறது. இந்த பூனையின் அசாதாரண திறமையை பார்த்த இணையவாசிகள், அதன் துல்லியமான அடிகளையும், சமநிலையையும் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
விளையாட்டு மைதானத்தில் நுழைய தடை விதிக்கப்பட்ட இடத்தில், இந்த பூனை துணிச்சலாக நுழைந்து, மனிதர்களுடன் பேட்மிண்டன் ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் @mustsharenews பகிர்ந்த இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு பயனர், “இந்த உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன” என்று கூற, மற்றொருவர், “இந்த பூனை என்னை விட சிறப்பாக விளையாடுகிறது” என்று புகழ்ந்தார்.
“இந்த பூனைக்கு தங்கப் பதக்கம் கொடுங்கள்” என்று ஒருவர் கருத்து தெரிவிக்க, இன்னொருவர், “பூனையின் பின்புறம் யாரோ பிடித்திருப்பதால் அது விழவில்லை” என்று கூறினார்.
ஒரு பயனர், “பூனைகளின் எதிர்வினை வேகம் சராசரியாக 70 மில்லி வினாடிகள், மனிதர்களோ 200 மில்லி வினாடிகள். மூன்று மடங்கு வேகம்” என்று வியந்தார். இந்த வீடியோ, பூனைகளின் இயல்பான திறமைகளை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
