சோஷியல் மீடியாவில் தினம் தினம் வைரலாகும் வீடியோக்களில் சில மனதை கோபத்தில் ஆழ்த்தினாலும், சிலவை இதயத்தை தொட்டு விடுகின்றன. அப்படி ஒரு அழகிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிகிறது. சாதாரண சேலையில், ட்ரெயினில்  பொரி கலந்த காரசாரமான ஸ்நாக் விற்கும் ஒரு அம்மா, போலிவுட் பாடலுக்கு லிப்ஸிங்க் செய்து எடுத்த ரீல் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

‘ஜுதாய்’ படத்தின் ‘மைன் துஜ்ஸே ஆசே மிலூன், தேரி ஜான் பன் ஜாவூன்…’ பாடலுக்கு இவர் காட்டிய எக்ஸ்ப்ரெஷன்கள், சிரிப்பு, நம்பிக்கை – இவை அனைத்தும் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுவிட்டன. இந்த அம்மாவின் எளிமையும், தன் வேலையை மகிழ்ச்சியுடன் செய்யும் உற்சாகமும் பார்ப்பவர்களை புன்னகைக்க வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by SangeetaGaikwad123 (@sangeetagaikwad123)

இன்ஸ்டாகிராமில் sangeetagaikwad123 என்ற ஐடி-யில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, 1 கோடிக்கும் மேல் பார்வைகளையும், 4 லட்சத்திற்கு மேல் லைக்ஸ்களையும் பெற்று, பலரது கருத்துக்களை பெற்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில், ட்ரெயின் கதவுக்கு அருகே அமர்ந்து, முன்னால் பொரி  நிரம்பிய கூடையுடன் இருக்கும் இந்த அம்மா, பாடலின் ஒவ்வொரு வரிக்கும் தனித்துவமான எக்ஸ்ப்ரெஷன்களை வழங்கி அசத்தியிருக்கிறார்.

அவரது சிரிப்பு, தன்னம்பிக்கை, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு மகிழும் அணுகுமுறை ஆகியவை பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது. ‘இதுதான் துக்கத்திலும் சந்தோஷம் தேடுவது!’ என்று ஒரு யூசர் கமெண்ட் செய்ய, ‘டிஜிட்டல் இந்தியாவின் பவர் இதுதான், 10 வருடத்தில் எத்தனை பேர் ஸ்டார்கள் ஆனார்கள்!’ என்று மற்றொருவர் புகழ்ந்துள்ளார்.

சிலர் ட்ரெயின் கதவில் அமர்வது ஆபத்து என அறிவுரை கூறியுள்ளனர். இந்த அம்மாவின் பெயர் சங்கீதா காய்க்வாட், இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் ஃபாலோவர்களுடன் ஏற்கனவே பிரபலமானவர். இந்த ரீல், அவரது திறமையை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. வாழ்க்கையின் எளிய தருணங்களில் மறைந்திருக்கும் இத்தகைய மேஜிக்கை சோஷியல் மீடியா வெளிச்சம் போட்டு காட்டுவது, நமக்கு ஒரு புன்னகையையும், உத்வேகத்தையும் தருகிறது.