இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நபர் ஒருவர் மெடிக்கலுக்கு வருகிறார். அங்கு இருக்கும் பெண்ணிடம் ஏதோ ஒரு மருந்தை கேட்கிறார். இதையடுத்து அந்தப் பெண் தனது இருக்கையில் இருந்து எழுந்து உள்ளே சென்று மருதை எடுக்க செல்கிறது.

 

அப்போது இந்த நபர் அங்கிருந்த கல்லாப் பெட்டியில் இருந்து பணம் மற்றும் செல்போனை எடுத்து வெளியே வைக்கிறார். அதன் பின் அங்கிருந்த பேனாவையும் எடுக்கிறார். இதையடுத்து அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்க்கிறார். அதன் பின் அந்த பணம், செல்போன் எதையும் எடுக்காமல் தான் கையில் வைத்திருந்த பேனாவை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.