இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே நிதிஷ்குமார் வெளியேறி இருக்கக்கூடிய நிலையில் மம்தா பானர்ஜி கட்சிகளை விமர்சித்திருக்கிறார். மம்தா பானர்ஜி வார்த்தைகள் என்பது தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் தங்களது சிறகுகள் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டன என விமர்சனம் செய்திருக்கிறார். அவர் அதை காங்கிரஸ் குறிப்பிடுகிறாரா  அல்லது  மற்ற  கட்சிகளை குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் கூட்டணியில் இருக்கக்கூடிய சில கட்சிகளை அவர் விமர்சித்து இருக்கிறார். தேர்தல் நேரம் என்று வந்தால் மட்டும் சிலருக்கு சிலிர்க்க ஆரம்பித்துவிடுகிறது.  பாஜக உடனான  சண்டை  தொடரும். பாஜகவுக்கு எதிராக தனித்தே போராடுகிறோம். பாஜகவை ஒரு கட்சியில் வீழ்த்த முடியும் என்றால் அது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தான் என்று அவர் கூறியிருக்கிறார்.

நேற்றைய தினம் சமாஜ்வாதி கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளியேற்றி இருக்கிறார்கள். இப்படி  எதிர்மறையான விஷயங்கள் இந்தியா கூட்டணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே நடந்து வருவது, தொடர்ந்து நாளுக்கு நாள் இந்த கூட்டணி இடையே விரிசல ஏற்பட்டு வருகிறது என்பதை பார்க்க முடிகின்றது.