திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு, இயக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு கழகம் எழுச்சியோடும், மிகச்சிறந்த உணர்ச்சியை பெருக்கத்தால் இந்த இயக்கத்தை தோற்கடிக்க நினைக்கின்ற அத்தனை பேரும் மண்ணைக் கவிழ்கின்ற வகையில் 40க்கு 40 என்று வெற்றி முழக்கம் இடுவதற்கு தயாராகி  கொண்டிருக்கின்ற பாக முகவர்கள்  கூட்டத்தில் இங்கே வராவிட்டாலும்,

இந்த நிகழ்வினை வீட்டிலிருந்தே காணொளி மூலம் கவனித்துக் கொண்டிருக்கின்ற எங்கள் ஆருயிர் தலைவர்…..  இந்த திருநாட்டின் எதிர்காலம்…  தளபதியார் அவர்கள். எப்போதுமே RS பாரதி  சொல்லை நான் தட்டுவதில்லை. அதனால் நேரடியாகவே களத்திலே இறங்கி பணியாற்றுகின்ற கழக நண்பர்கள்…. இன்றைக்கு ஆயிரம் ஆயிரமாக ஏறத்தாழ  ஐந்து இடங்களில்……  ஐந்து மாநாடுகளை அன்பு தலைவர் தளபதி அவர்கள் கூட்டி இருக்கிறார்…..

முதல் மாநாடு திருச்சியிலே முகவர் மாநாடு நடைபெற்றது….  அடுத்து ராமநாதபுரம்,  அடுத்து காங்கேயம் அதற்கு அடுத்து…. திருவண்ணாமலை அது முடிந்து இன்றைக்கு நம்முடைய ஊரில்…..  நம்முடைய பகுதியில் அன்பு நண்பர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாக முகவர்களுக்காக  மாநாடு நடைபெறுகின்ற விந்தை நம்முடைய தமிழகத்தில் மட்டும்தான்,  அதுவும் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நாடு நன்றாகவே அறியும். எங்கேயும் இப்படிப்பட்ட பெரும் கூட்டம் இருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு கூட்டம் நடத்தினாலும்….

ஏறத்தாழ 90 சதவீதம் இளைஞர்கள் மட்டுமே பங்கேற்றிருக்கின்ற இந்த பாக முகவர்கள் கூட்டத்தில்….  இறுதியிலேயே அவர்கள் ஆற்றுகின்ற செயல் காரணமாக…..  அன்பு தலைவர் தளபதி உன்னுடைய கரங்கள் வலுப்படுத்தப்பட்டு,  40க்கும் 40 என்கின்ற நிலையை இந்த நாட்டில்   நடைபெறப் போகின்ற அரசியல் முடிவுகள் அமையும் என்பதை நான் நன்றாகவே அறிவேன் என தெரிவித்தார்.